தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகும் தல அஜித்தின் ரீல் மகள் அனிகா.!

Default Image

மலையாளத்தில் வெளியான கப்பேல்லா படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அதில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.  தல அஜித்துடன் விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

வழக்கமாக முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு போட்டோஷூட் நடத்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைப்பார்.  அந்த போட்டோஷூட் எல்லாம் ஒரு ஹீரோயின் வாய்ப்புக்காக தான். தற்போது அது நிறைவேறியுள்ளது .

மலையாளத்தில் வெளியான திரைப்படம் “கப்பேல்லா”.   இதில் அன்னா பென்,  ஸ்ரீநாத் பாசி, ரோஷன் மாத்யூ, தான்வி ராம், முஸ்தபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.  முகமது முஸ்தபா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதை தெலுங்கில் ‘புட்ட பொம்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யவுள்ளனர். தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்