அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநர் ஆண்ட்ரூ மெக் காபே பணி நீக்கம்!
ஆண்ட்ரூ மெக் காபே அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப் பி ஐயின் துணை இயக்குநராக இருந்த ஆண்ட்ரூ மெக் காபே, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் ரஷ்யாவுக்கு உள்ள தொடர்பு பற்றிய விசாரணையில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவர். ஓய்வுபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன் அவரைப் பணியில் இருந்து நீக்கி அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் அவருக்கு ஓய்வூதியப் பயன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. எஃப் பி ஐ இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமியை டிரம்ப் நிர்வாகம் நீக்கி ஒன்பதே மாதங்களுக்குள் இப்போது துணை இயக்குநர் ஆண்ட்ரூ மெக் காபே நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.