பிசாசு 2 படத்திற்கு ஆண்ட்ரியா தேசிய விருது வாங்குவார்- மிஷ்கின்..!!
பிசாசு 2 படத்திற்கு ஆண்ட்ரியா தேசிய விருது வாங்குவார் என இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முதன் முதலாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மிஸ்கின் திரைப்படத்திற்காக இசையமைக்கிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டிவிட்டரில் ரசிகர்களுடன் பேசிய மிஷ்கின் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நடிப்பை பற்றி பேசியுள்ளார்.
அதில் ” பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா சிறப்பாக நடித்துள்ளார். நிச்சயம் இந்த ஆண்டு அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்குவார்” என்று கூறியுள்ளார்.