மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு பின்னடைவு !அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்
உலகக் கோப்பை தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளார்.
இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரான ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளார்.இது தொடர்பாக மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் ரசல் பங்கேற்கமாட்டார் .இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரசல் விலகியுள்ளார். ஆண்ட்ரே ரசலுக்கு பதிலாக சுனில் அம்ப்ரிஸ் மேற்கிந்திய தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.