பிகில் இயக்குனர் அட்லீ வழங்கும் அந்தகாரம்.! ஹீரோ யாரு தெரியுமா?!
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் அட்லீ. இவர் பிகில் படத்தின் வெற்றியை அடுத்து யாரை இயக்க போகிறார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருக்கிறது.
இந்நிலையில், இயக்குனர் அட்லீ தனது தயாரிப்பு நிறுவனமான ஏ பார் ஆப்பிள் ( A for Apple ) எனும் நிறுவனம் மூலம், பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து புதிய படத்தை தயாரித்து உள்ளார். இந்த படத்திற்கு அந்தகாரம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் போஸ்டரை அட்லீ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை விக்னராஜன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
Happy to be presenting #ANDHAGHAARAM , trailer will be out on the 14 th of April , stay tuned @priyaatlee @aforapple_offcl @PassionStudios_ @ Sudhans2017 @vvignarajan @iam_arjundas @vinoth_kishan @poojaram22 @MishMash2611 @pradeepvijay @edwinsakaydop #andhaghaaramfirstlook pic.twitter.com/b976daGSk4
— atlee (@Atlee_dir) April 12, 2020