தளபதியை முந்திய ஆண்டவர்.! “விக்ரம்” தான் நம்பர் 1.. அப்போ அஜித் நிலைமை.?!

Default Image

இந்த வருடம் பல பெரிய பட்ஜெட் படங்களும், பல சிறிய பட்ஜெட் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது என்றே கூறலாம். அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெளியாகி அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் குறித்த விவரத்தை தயாரிப்பாளரும், சினிமா விர்சகருமான ஜி.தனஞ்செயன் தன்னுடையை யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

1.விக்ரம்  

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

2.பீஸ்ட்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், விமர்சன ரீதியாக படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் விஜய் படம் என்பதால், தமிழகத்தில் மட்டும் 120 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

3.வலிமை 

ValimaiPongal

இயக்குனர் எச்,வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான இந்த படம் வெளியான முதல் நாளில் நல்ல வசூல் செய்தது. அதன்பிறகு வசூல் குறைந்த நிலையில், மொத்தமாக படம் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

4.கேஜிஎப் 2

நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான பான் இந்திய படமான இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும்  100 கோடிக்கு மேல் வசூல் செய்து நான்காவது இடத்தில உள்ளதாம்.

5.டான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான இந்த டான் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சூப்பரான வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 82 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

6.ஆர்.ஆர்.ஆர்

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் வெளியான பான் இந்திய படமான இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தமிழகத்தில் 75 கோடி வசூல் செய்து 6-வது இடத்தை பிடித்துள்ளது.

7. எதற்கும் துணிந்தவன்

etharkum thuninthavan

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று தமிழகத்தில் மட்டும் 50 கோடி வசூல் செய்து 7-வது இடத்தில் உள்ளது.

8. காத்து வாக்குல ரெண்டு காதல் 

நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா, நயன்தாரா, ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 40 கோடிக்கு மேல் வசூல் செய்து எட்டாவது இடத்தில உள்ளது.

9 . வீட்டுல விஷேசம், நெஞ்சுக்கு நீதி

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டுல விஷேசம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி ஆகிய இரண்டு படங்களும் தமிழகத்தில் மட்டும் 12 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

10. எப்ஐஆர்

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 10 கோடிக்கு மேல் வசூல் செய்து பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park