அந்தகன் படத்தில் இணைந்த மாஸ்டர் பிரபலம்..!!

அந்தகன் படத்தில் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .
மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். இந்த படத்தில் கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கேஎஸ் ரவிகுமார், பிக் பாஸ் வனிதா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதைபோல் தளபதி 65 படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025