மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு.! தலைவிரித்து ஆடும் கொவிட்-19 வைரஸ்.!

Default Image
  • சீனாவின் வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் கடந்த நாட்களாக கொவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சுமார் 50 நாட்களுக்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. அதுமட்டுமில்லாமல் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் முகத்தில் அணியும் மாஸ்க்குகள் பற்றாக்குறையால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்த வைரசால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை வந்த வண்ணமே உள்ளது. முந்தைய நிலையை விட சற்று குறைந்து நேற்று (புதன்கிழமை) வரை 1,868 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் 93 பேர் ஹூபேயிலும், மேலும் 5 பேர் நாட்டின் பிற பகுதிகளை சேர்த்தவர்கள் பலியாகியுள்ளனர். இதில் வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் கடந்த நாட்களாக கொவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு முன் வைரஸை கண்டறிந்த மருத்துவர் லீ இந்த வைரசால் பலியானது குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதும் புதிதாக 1,886 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்பட்டுள்ளது. ஆனால் இதில் பெரும்பாலும் ஹூபேயில் இருப்பவர்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த வைரசால் நாடு முழுவதும் மொத்தம் 72,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என குறிப்பிடப்படுகிறது.

இதையடுத்து சீனா முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டவர்களில் 12,552 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 6,960 படுக்கைகள் கொண்ட 9 தற்காலிக மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் ஹுபெய் மாகாணத்துக்கு 217 மருத்துவக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 25,633 மருத்துவ ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்