அனைத்து சத்துக்களையும் கொண்ட கம்பு….!!!!
இன்றைய தலைமுறையினர் அதிகமாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். தானியங்கள் என்றால் என்ன என்று கூட தெரியாத நிலையில் தான் இன்றைய தலைமுறையினர் உள்ளனர்.
அரிசியை விட கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்சத்து என அனைத்துச் சத்துக்களுக்குமே அதிகமாக உள்ள தானியம் கம்பு. ஏரியை காட்டிலும் கிட்டத்தட்ட 8 மடங்குகள் அதிக இரும்புசத்து உள்ளது.
கம்பு வளரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் சத்துக்களை கொடுக்க கூடிய ஆற்றலை கொண்டது.