ஒரு நேரத்தில் 6 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட இத்தாலிய பெண்..! அதிர்ச்சியில் மக்கள்..!
இத்தாலிய பெண் ஒருவர் ஆறு டோஸ் ஃபைசர் கோவிட் தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளார்.
கொரோனாவிற்கு பிறகு உலகில் நடந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியான பல நிகழ்வுகளில் கேள்வி படாத ஒரு கதை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையால் உலகமே பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இருந்தபோதிலும், தடுப்பூசியை பொறுத்தவரை சமூக ஊடகங்களில் பல கேள்விகள் எழுந்துள்ளது. இரண்டு டோஸ் போதுமானதா அதில் வெவ்வேறு நிறுவனங்கள் கலக்கப்படலாமா அல்லது ஒரு டோஸ் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது. இந்நிலையில், இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக ஒரு இத்தாலிய பெண் மாறியிருக்கிறார்.
சமீபத்தில் 23 வயது இத்தாலிய பெண் ஒருவர் ஃபைசர்-பயோஎன்டேக் கோவிட் தடுப்பூசியின் ஆறு டோஸ்களையும் ஒரே நேரத்தில் போட்டுக்கொண்டதாக அந்நாட்டின் தலைப்புச்செய்திகளில் வெளியானது. மேலும் இதனால் அந்த பெண் தவறான அளவை போட்டுக்கொண்டதாக ஏஜிஐ செய்தி நிறுவனம் திங்களன்று வெளியிட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக தடுப்பூசியின் ஆறு முழு அளவைப் போட்டுக்கொண்ட பிறகும் அந்தப் பெண் எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் சந்திக்கவில்லை.
மேலும், இவரது நல்வாழ்வை பாதுகாக்க இவருக்கு திரவங்கள் மற்றும் பாராசிட்டமால் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த இத்தாலிய பெண்ணுக்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசிக்கு பதிலாக தடுப்பூசியின் முழு குப்பியை தவறாக உபயோகித்தது தெரியவந்துள்ளது. இது தடுப்பூசியின் ஆறு அளவுக்கு சமம் என்றும் கூறியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.
இதுவரை ஃபைசர்-பயோஎன்டேக் கோவிட் தடுப்பூசியின் அதிகபட்ச அளவே நான்கு அளவுகள் தான். இதுகுறித்து, ஏஎஃப்பி நாட்டின் மருந்து சீராக்கிக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி இஸ்ரேல், ஆஸ்திரேலியா , அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.