இந்தியாவில் பெட்ரோல் கார்களை விட மின்சார கார்கள் 19% முதல் 34% தூய்மையானவை: ஆய்வு

Default Image

இந்தியாவில் பெட்ரோல் கார்களை விட மின்சார கார்கள் 19% முதல் 34% தூய்மையானவை என்று சர்வதேச கவுன்சில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருகிறது.இதனால்,மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன்காரணமாக,சிலர் சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல்,வாகன எரிபொருள் விலையேற்றத்தால் மின்சார வாகனங்களின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது.

petrol price 4

கார்பன் வெளிப்பாடு:

விலையேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும் பொதுவாக பெட்ரோல்,டீசல் வாகனங்களில் இருந்து வெளிப்படும் கார்பன் புகையானது சுற்று சூழலை பெருமளவில் பாதிக்கிறது.அதனால்,பெட்ரோல் எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களை விட மின்சார வாகனங்கள் தூய்மையானவை என்பதில் சந்தேகமில்லை.இருப்பினும்,உண்மையில் மின்சார வாகனங்கள் எவ்வளவு சுத்தமாக இயங்குகின்றன என்பது பற்றிய விவாதங்கள் நடந்துள்ளன. அதில்,மின்சார உற்பத்தியின் மூலமானது மிகப்பெரிய அளவில் கார்பனை வெளிப்படுத்துவதாகவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச கவுன்சில் ஆராய்ச்சி:

இந்நிலையில்,தூய்மையான போக்குவரத்திற்கான சர்வதேச கவுன்சில் (ஐ.சி.சி.டி) சமீபத்திய ஆராய்ச்சியில்,மின்சார வாகனங்களை பெட்ரோல் வாகனகங்ளுடன் ஒப்பிடும்போது 69% வரை தூய்மையானவை என்று தெரிவித்துள்ளது.

அதாவது,சராசரி நடுத்தர அளவிலான பேட்டரி மின்சார வாகனங்களின் வாழ்நாளில் வெளிப்படும் மாசுபாடு பெட்ரோல் மூலம் இயக்கப்படும் வாகனங்களை விட ஐரோப்பாவில் 69%, அமெரிக்காவில் 68% மற்றும் சீனாவில் 45% மற்றும் இந்தியாவில் 19% முதல் 34% வரை குறைவாக இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆய்வின் படி, நிலக்கரி அடிப்படையிலான ஆற்றலை பெரிதும் நம்பியுள்ள இந்தியாவிலும் சீனாவிலும் கூட, மின்சார வாகனங்களின் செயல்பாடுகள் நன்மைகளை தருகின்றன.ஏனெனில்,மின்சார உற்பத்தி செயல்முறை தொடர்ந்து குறைந்த அளவிலான கார்பனை வெளியிடுகின்றன. இதனால்,மின்சார வாகனங்களுக்கும் பெட்ரோல் வாகனங்களுக்கும் இடையிலான கார்பன் வெளிப்பாட்டின் இடைவெளி கணிசமாக அதிகரிக்கும் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.

கிரீன்ஹவுஸ் வாயு – பாரிஸ் ஒப்பந்தம்:

மேலும்,மீண்டும் பயன்படுத்தும் வகையிலான பேட்டரி மின்சார வாகனங்கள் மற்றும் எரிபொருள் செல் மின்சார வாகனங்கள் மட்டுமே கிரீன்ஹவுஸ் வாயு (GHG) குறைப்பு அளவை அடைய முடியும்.இதனால்,மின்சார வாகனங்களானது பாரிஸ் ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட போக்குவரத்துத் துறையிலிருந்து GHG உமிழ்வின் அளவைக் கணிசமாகக் குறைக்கும். பாரிஸ் ஒப்பந்தம் புவி வெப்பமடைதலின் அளவை இரண்டு டிகிரி செல்சியஸுக்குக் குறைப்பதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆராய்ச்சி 2021 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட கார்களின் வாழ்க்கை சுழற்சியில் வெளிப்படும்  கிரீன்ஹவுஸ் வாயுவின் அளவை 2030 வரை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுப்பாய்வு ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் என்றால் என்ன:

சில வாயுக்கள் சூரிய சக்தியை உறிஞ்சி பூமியின் வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்றன.மேலும் ஒரு பகுதி தரையில் இருந்து வெப்பத்தை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கிறது.இதற்கு காரணமான வாயுக்கள்  கிரீன்ஹவுஸ் வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் :

  • நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx)
  • ஓசோன் (O3)
  • குளோரோஃப்ளூரோகார்பன்கள் (சி.எஃப் கார்ட்டிஃபிகல்)
  • நீர் நீராவி (H2O)
  • கார்பன் டை ஆக்சைடு (CO2)
  • மீத்தேன் (சிஎச் 4) போன்றவை கிரீன்ஹவுஸ் வாயுக்கள் ஆகும்.இவை தொழில்சாலை நடவடிக்கைகள் மற்றும் வாகனங்கள் வெளிப்படுத்தும் புகையினால் தற்போது அதிகரித்துள்ளது.

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் ஏற்படுத்தும் விளைவுகள்:

  • ஓசோன் பாதிப்பு.
  • பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு.
  • சில பகுதிகளில் வறட்சி அதிகரிப்பு,மற்ற பகுதிகளில் வெள்ளம்.
  • அதிக அதிர்வெண் கொண்ட சூறாவளி உருவாக்கம்.
  • துருவப் பகுதி உருகுதல், இதன் விளைவாக கடல் மட்டங்கள் உயருதல்.
  • மழைப்பொழிவு அதிகரிப்பு (இது குறைவான நாட்கள் மற்றும் அதிக மழை பெய்யும்).
  • வெப்ப நாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆனால்,மின்சார வாகனங்களினால் இத்தகைய பாதிப்புகள் குறைவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்