சூயஸ் கால்வாயில் சிக்கிய சர்வதேச கப்பல்.! உலக வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம்.!

Default Image

உலக வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாய் பகுதியில் ஒரு சர்வதேச சரக்கு கப்பல் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எகிப்து நாட்டில், இஸ்மாலியாவில், சூயஸ் கால்வாய் மாகாணத்தில் உள்ள கந்தாரா நகருக்கு அருகே எம்வி குளோரி என்ற கப்பல் கரை ஒதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி திங்களன்று கூறுகையில், எம்வி குளோரி கப்பல் தரையிறங்குவதால் சூயஸ் கால்வாய் போக்குவரத்து பாதிக்கப்படாது என தெரிவித்தார்.

இருந்தும், இந்த கப்பலை ஒதுக்க, எவர் கிவன் இழுவை படகுகள் மூலம் பெரும் மீட்பு நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தடை ஏற்பட்டால், அது உலகளாவிய வர்த்தகத்தில் ஒரு நாளைக்கு 9 பில்லியன் டாலர்களை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்