விளையாட்டாய் பேசிய ‘தலிபான் ஜோக்’.! ஸ்பெயின் நாட்டு விசாரணையில் சிக்கிய இந்திய வம்சாவளி மாணவர்.!
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்ய வர்மா எனும் 18 வயது மாணவர் லண்டனியில் பாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 2022 ஜூலை மாதம் லண்டன் கேட்விச் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான மெனோர்கா தீவுக்கு சென்றார்.
ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..!
அப்போது விளையாட்டாக தனது ஸ்னாப்சாட் கணக்கில் இருந்து, தான் தாலிபான் உறுப்பினர் என்றும், விமானத்தை வெடிக்க செய்ய உள்ளேன் என்றும் தனது நண்பர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக தெரிகிறது. விளையாட்டாய் பதிவிட்ட இந்த ‘தலிபான்’ ஜோக் செய்தி அவருக்கு பெரும் பிரச்சனையாக தற்போது தொடர்ந்து வருகிறது.
இந்த செய்தி UK பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்டதும் உடனடியாக அவரை பின்தொடர்ந்து அவர் ஸ்பெயினில் இருந்து லண்டன் திரும்பி கொண்டு இருக்கையில், விமானத்தின் இரு பக்கமும் ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பியது. லண்டன் திரும்பியதும் , ஏர்போர்ட்டில் வைத்து வர்மா கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட வர்மா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஸ்பெயின் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த திங்கள் கிழமை ஆதித்யா வர்மாவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அங்கு சென்று, தனது விளக்கத்தை வர்மா அளித்துள்ளார். அதில், நான் எனது தனிப்பட்ட நண்பர்கள் குழுவில் ஒரு நகைச்சுவைக்காக அவ்வாறு அனுப்பினேன். பள்ளியில் இருந்தே, எனது பேச்சுக்கள் எப்போதும் நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். வேறு எந்தவித நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்து, தான் வந்த விமானத்தின் இருபக்கமும் ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்தது பற்றி கேட்கையில், “ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து கொண்டிருந்ததால், அந்த தாக்குதலுடன் தொடர்புடைய ராணுவப் பயிற்சி என்று நினைத்தேன்” என்று வர்மா கூறியுள்ளார். தற்போதைக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்ட வர்மா, மீண்டும் தேவைப்பட்டால் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் ஸ்பெயின் பாதுகாப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.