அமெரிக்கா நிறுவனத்தில் 65 கோடி ரூபாய் மேல் மோசடி செய்ததற்காக இந்திய வம்சாவளி ஒருவர் கைது !!!
- சிஸ்கோ நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடுவில் இருந்து பணி ஓய்வு பெற்றார்.
- குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிரித்விராஜ்-விற்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.2 கோடி அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.
அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சிஸ்கோ. இந்த நிறுவனத்தில் சர்வதேச வினியோக பிரிவில் இயக்குனராக பணியாற்றிவர் பிரித்விராஜ் பிகா(50).
இந்திய வம்சாவளி சேர்ந்தவர் பிரித்விராஜ் பிகா.சிஸ்கோ நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடுவில் இருந்து பணி ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் பணியில் இருந்த காலத்தில் பிரித்விராஜ் இணையம் வழியாக சிஸ்கோ நிறுவனத்தில் இருந்து 9.3 பில்லியன் டாலர் வரை மோசடி செய்துள்ளார்.
(இந்திய மதிப்பில் சுமார் ரூ.65 கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 200)வரை மோசடி செய்துள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்து உள்ளது.
இதை தொடர்ந்து இந்திய வம்சாவளி பிரித்விராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது உள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிரித்விராஜ்-விற்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் சுமார் ரூ.2 கோடி அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.