அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கேம்டூல் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சிகாகோவுக்கு வடமேற்கில் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்டன் நகரில் உள்ள மிகப்பெரிய ரசாயனம் தயாரிக்கும் நிறுவனமான கேம்டூல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி, இது காலை 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆலையின் மேற்கூரையில் ஏற்பட்ட நெருப்பு ஆலை முழுவதையும் ஆட்கொண்டதால், கரும்புகையால் அவ்விடம் சூழ்ந்துள்ளது.
ராக்டன் நகர தீயணைப்பு வீரர்கள் அங்கிருக்கும் 70 தொழிலாளர்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். மேலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை, இருந்த போதிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் இன்ஜீன் ஆயில்கள் மற்றும் அனைத்து விதமான கிரீஸ்களும் தயாரிக்கப்படுகின்றன. இதன்படி, இங்கு பலகோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து குறித்த விசாரணையில் ராக்டன் காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…