முதலை தோலில் உருவான ரோல்ஸ் ராய்ஸ் கார்;கைப்பற்றிய அதிகாரிகள்…!

Default Image
  • ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று இத்தாலி நாட்டின் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
  • ஏனெனில்,ரோல்ஸ் ராய்ஸ் காரின் இருக்கைகள் மற்றும் உள் கதவுகள் உள்ளிட்ட காரின் உள் அமைப்பானது சட்டவிரோதமாக முதலை தோலால் வடிவைமைக்கப்பட்டிருந்தது.

பொதுவாக கார் வாங்குபவர்கள்,அதனை தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க மூன்றாம் தரப்பு கடையைப் பயன்படுத்துவது வழக்கம்.அவ்வாறு மாற்றும்போது சிலர் சட்ட ரீதியான எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.

அந்த வகையில்,ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூப்பர் கவர்ச்சியான ரோல்ஸ் ராய்ஸ் காரின் இருக்கைகள் மற்றும் உள் கதவுகள் உள்ளிட்ட காரின் உள்ளமைப்பானது முதலை தோல் மூலமாக வடிவமைக்கப்படிருந்தது.

இந்த கார் ஆனது ரஷ்யாவிலிருந்து இத்தாலிக்கு இறக்குமதி செய்யப்பட்டு ,பின் ரோம் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சியான கார்களை விற்பனை செய்வதற்கான பயணத்தில் இருந்தது.அதற்காக,இத்தாலியின் லிவோர்னோ துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால்,இதைப்பற்றி கேள்விப்பட்ட இத்தாலியை சேர்ந்த சுங்க அதிகாரிகள்,அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை கைப்பற்றினர்.

ஏனெனில்,உயிரினங்களான காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் (CITES) சர்வதேச வர்த்தகத்திற்கான வாஷிங்டன் மாநாட்டின் கீழ் முதலைகள் பாதுகாக்கப்பட்ட இனங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆனால்,ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆனது சட்ட விரோதமாக முதலை தோலின் மூலம் உட்புறத்தை வடிவமைத்ததால்,கடுமையான அபராத தொகை செலுத்த வேண்டும் என்றும்,காரின் உட்புறத்தில் பொருத்திய முதலை தோலையும் அகற்ற வேண்டும் என்றும் ரோமில் உள்ள கார் உரிமையாளரை சுங்க அதிகாரிகள் எச்சரித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்