தாய் வயது முதல் மகள் வயது வரை உள்ள பல பெண்களை துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் ..!
கனடாவை சேர்ந்த நரம்பியல் சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஜெப்ரி. இவர் தனது மருத்துவமனைக்கு 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வந்த பெண்களிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
அதிலும் வயது வித்தியாசம் என்று கூட பார்க்காமல் மோசமான நடந்துள்ளார். தாய் வயது பெண்கள் முதல் மகள் வயது பெண்கள் வரை உள்ள பல பேரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மருத்துவர் ஜெப்ரியால் 17வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். தற்போது வரை 36 பெண்கள் இவர் மீது குற்றம் சாட்ட முன் வந்த நிலையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் கூறுகின்றன.
இந்நிலையில் இவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.இவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு 60 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் வழக்கு செலவுக்காக 6 ஆயிரம் பவுண்டுகள் செலுத்த வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஜெப்ரி இனிமேல் மருத்துவம் பார்க்க உரிமம் கேட்க மாட்டேன் எனவும் எழுதி கொடுத்து உள்ளார்.