இத்தாலியில் ஒரு தீவில் தனி ஆளாய் வசித்த 81 வயது முதியவர்…! 32 ஆண்டுகளுக்கு பின் தீவை விட்டு வெளியேறினார்…! என்ன காரணம்…?
இத்தாலியில் ஒரு தீவில் தனி ஆளாய் வசித்த 81 வயது முதியவர், 32 ஆண்டுகளுக்கு பின் தீவை விட்டு வெளியேறினார்.
இத்தாலியை சேர்ந்த ராபின்சன் குருசோ என அழைக்கப்படும் 81 வயது முதியவர் 1939ஆம் ஆண்டுஇத்தாலி கடற்பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு மணல் கொண்ட கடற்கரையில் உள்ள புடெல்லி என்ற தீவில் ராபின்சன் குருசோ தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து ராபின்சன் குருசோ என்று அழைக்கப்படும் இவர் மௌரோ மொராண்டி என்று அழைக்கப்பட்டார். அவருடன் வந்த மற்ற நண்பர்கள் தொடர்ந்து பயணம் செய்த நிலையில், ராபின்சன் குருசோ அந்த தீவில் பாதுகாவலராக இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து, அந்த தீவினை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் அந்த தீவை பாதுகாத்து வந்தார்.
அந்தத் தீவில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி பாதுகாத்து வந்ததோடு கடற்கரைகளை அழகாக வைத்திருந்தார். தீவின் சுற்றுச்சூழல் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விளக்கினார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு, தீவை நிர்வகித்து வரும், தேசிய பூங்கா அதிகாரிகள் தீவில் இருந்து வெளியேறும்படி அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இதனையடுத்து, இவர் 32 ஆண்டுகளுக்கு பின் தீவில் இருந்து வெளியேறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 32 ஆண்டுகளாக புடெல்லியை நான் பாதுகாத்து உள்ளதால், எதிர்காலத்தில் டெல்லி இதுபோல் பாதுகாக்கப்படும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.