யூட்யூப் மூலம் 185 கோடி ரூபாய் சம்பாதித்த 8 வயது சிறுவன்..!!
- forbes நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் அதிக பிரபலமானவர்கள் மற்றும் சாதித்தவர்கள்,சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
- அதே போல் இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் 8 வயது சிறுவன் முதலிடம் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கடைசியில் அந்த ஆண்டில் அதிகம பிரபலமானவர்கள் மேலும் சாதித்தவர்கள் மற்றும் சம்பாதித்தவர்கள் என்று நிறைய பட்டியல்களை forbes நிறுவனமானது வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது 2019ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.
அதைபோல் யூட்யூப் மூலம் சம்பாதிப்பவர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்காவை சேர்ந்த 8 வயது சிறுவரான ரியான் காஜி இந்த ஆண்டும் முதலிடம் தட்டி சென்றுள்ளார். ரியான் காஜியின் நிஜமான பெயர் ரியான் குவன் என்று அழைக்கப்படுகிறார்கள்.
‘ரியான்ஸ் வேர்ல்ட்’ என்ற பெயரில் 2015-ம் வருடம் யூட்யூப் சேனலை தொடங்கியுள்ளார்.இவரது ரியான்ஸ் வேர்ல்ட்,யூடியூப் சேனலுக்கு 2.2 கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். 2109ம் வருடத்தில் மட்டும் இவரது யூட்யூப் சேனல் வைத்து ரூ.185 கோடி ரூபாய் வருமானத்தை சம்பாதித்துள்ளார்.
இந்த ரியான்ஸ் வேர்ல்ட்ல் விளையாட்டு பொருள்களை பயன்படுத்துவது குறித்து வீடியோ வெளிட்டுதால் கடந்த ஆண்டு 22 மில்லியன் டாலரை சம்பாதித்துள்ளார்.