2018 தமிழக பட்ஜெட்:ரூ.750 கோடி அம்ருத் திட்ட பணிகளை செயல்படுத்த ஒதுக்கீடு !
ரூ.1000 கோடி ஊரக வளர்ச்சித்துறையின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ருத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படாத நகரங்களில் பணிகளை செயல்படுத்த ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.