தண்ணீர் வழியாக உடலில் நுழைந்து மூளையை தின்னும் அமீபா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்காவில் உள்ள புளோரிடா சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெக்லேரியா பவுலேரி என்ற மிக நுண்ணிய வகை அமீபா மூளையை தின்னும் ஒரு அரிய வகை என்றும், இது ஒரு செல் மட்டுமே உடையது என்றும் கூறுகின்றனர்.வழக்கமாக இந்த அமீபா குளிர்வில்லாத நன்னீரில் தான் காணப்படும் என்றும், மனிதர்களிடமிருந்து மனிதருக்கு பரவாது என்று தெரிவித்துள்ளனர். இந்த அமீபா மூளையில் தொற்றினை ஏற்படுத்தும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொற்றால் கடந்த 2009 மற்றும் 2018 உள்ளிட்ட காலங்களில் 34 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30பேருக்கு பொழுதுபோக்கு நீர்நிலைகளில் இருந்து பரவியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த தொற்று பெரும்பாலும் அமெரிக்காவின் தென் பகுதியில் தான் நிகழும் என்றும், 1962ல் புளோரிடாவில் 36 பேர் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஹில்ஸ்பாரோ கவுன்டியில் ஒருவர் இந்த மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஏரியில் நீந்தும் போது மூக்கு வழியாக இந்ந அமீபா நுழைந்துள்ளதாக கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது குழாய் தண்ணீர் உட்பட வேறு எந்த வகை தண்ணீராக இருந்தாலும் மூக்கில் படாமல் குடிக்க ஜூலை 3 தேதி அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…