கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் சிகிச்சை பெற்று வரும் நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அமிதாப் பச்சனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கும், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கு கொரோனா தொற்று இல்லை என்பதும், குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களின் நலன் குறித்து விசாரித்தும், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அமிதாப் பச்சன் சிகிச்சை பெற்று வரும் நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதனுடன் நெருக்கடியான இந்த இக்கட்டான சூழ்நிலைகளில், வெள்ளை கோட்டில் உள்ள இவர்கள் கடவுளின் உருவம் என்றும், அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நமது உயிர்களை காப்பாற்றுகிறார்கள். மேலும் கூறிய அமிதாப் பச்சன், பயம் மற்றும் மனசோர்வு எப்போதும் இருக்கும் என்றும், யாரும் பீதியடைய வேண்டாம் என்றும், இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து அனைவரும் கண்டிப்பாக மீண்டு வருவோம் என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…