அனைத்து கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்க வருகிறது அமெரிக்காவின் சூப்பர் தடுப்பூசி..!
கொரோனா வைரஸ்களின் அனைத்து வகைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவில் புதிய சூப்பர் தடுப்பூசியை தயாரித்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது உருமாற்றம் அடைந்து பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் என்று பரவக்கூடிய இந்த கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு, அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய சூப்பர் வேக்சினை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் கரோலினா பகுதியில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதனை தயாரித்துள்ளனர்.
ஹைபிரிட் தடுப்பு மருந்தான சூப்பர் வேக்சீனை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசியை எலிகளுக்கு பரிசோதித்து பார்த்துள்ளனர். அதன்படி, கொரோனாவின் ஆபாத்தான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக இது செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இது கொரோனாவை எதிர்த்து ஆன்டிபாடிகளை உருவாக்குவது பற்றி தெரியவந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த புதிய சூப்பர் வேக்சின் நுரையீரல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இந்த மருந்தை பற்றி ஆய்வாளர்கள், புதிய சூப்பர் வேக்சின் கொரோனா வைரஸ் மட்டுமின்றி விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவ கூடிய மற்ற கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து காக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த தடுப்பு மருந்தை அடுத்த வருடத்திலிருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளனர்.