‘அமெரிக்காவின் கதை மாறுகிறது’ – 2020-ம் ஆண்டின் நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்!

Default Image

அமெரிக்காவின் அதிபராக தேர்வு ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இருவரும், 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இருவரும், 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, இவர்கள் இருவரின் புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிட்ட டைம் இதழ், ‘அமெரிக்காவின் கதை மாறுகிறது’ என தலைப்பிட்டு உள்ளது.

டைம் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில், கொரோனா காலத்தில், செவிலியர்கள், மருத்துவர்கள், விநியோகம் செய்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள் என உயிரை பணயம் வைத்து வேலை செய்தவர், இந்த ஆனந்தின் சிறந்த நபர்களாக பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் சுகாதார பணியில் முன் களப்பணியாளர்கள்,  இன நீதி இயக்கத்தைச் சேர்ந்த அந்தோணி ஃபயூசி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகிய மற்ற மூன்று போட்டியாளர்களையும் பின்னுக்குத்தள்ளி  பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்த ஆண்டின்  சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்க உள்ளதாக டைம் இதழ் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்