சிகிச்சையின்றி ஹெச்.ஐ.வியிலிருந்து மீண்ட அமெரிக்க பெண்மணி!
சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் ஹெச்.ஐ.வி வைரஸில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்துள்ளார் அமெரிக்கா பெண் ஒருவர்.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஹெச்.ஐ.வியால் தாக்கப்பட்ட கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க பெண்மணி லோரீன் வில்லன்பெர்க் என்பவர் முழுவதுமாக இந்த ஹெச்.ஐ.வி வைரஸின் பிடியிலிருந்து சிகிச்சை ஏதும் இன்றி குணம் அடைந்துள்ளார். தற்போது 66 வயதாகும் இவருக்கு கடந்த 28 வருடங்களாக கிருமித்தொற்று இருந்துள்ளது.
ஆனால் இத்தனை வருடங்கள் ஆகவே இவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்துள்ளது. எனவே தான் இவர் இன்னும் உயிருடன் இந்த வைரஸ் கிருமியை வெல்லும் அளவுக்கு இருந்துள்ளார். ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே கிருமிகளின் பகைவர் என்று புகழ் பெற்றிருந்த இவர், அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த வைரஸ் கிருமியை முற்றிலுமாக வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் ஹெச் ஐவி வைரசுக்கு எதிராக போராடி வரக்கூடிய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பெண்மணியின் வாழ்க்கை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.