அமெரிக்கா -சீனா இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், அந்நாட்டோடு இனி இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு முற்றிலும் நசிந்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக தெரிவிது உள்ளார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சுமுக பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே, மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்ஆனது கையெழுத்தானது.
இதன் தொடர்ச்சியாகவே 2ம் கட்ட ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் தான் சீனாவில் கொரோனா தொற்றுபரவ ஆரம்பித்தது.
உலகம் முழுதும் பரவிய இத்தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் இவ்விவகாரத்தை சீனா சரியாக கையாள வில்லை என்று அமெரிக்கா அதன் மீது குற்றம்சாட்டியது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இது குறித்து கூறியதாவது:கொரோனா தொற்று, உலகம் முழுதுமே பரவாமல் அதனை சீனா தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.
மாறாக வூஹான் நகரில் இருந்து, சீனாவின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினர். இந்நிலையில் அமெரிக்கா – சீனா இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர்களுடன் இனி 2ம்-கட்ட வர்த்தக ஒப்பந்தம் இப்போதைக்கு வாய்ப்பே கிடையாது என்று ட்ரம்ப் கூறினார்.இவருடைய இந்த அறிவிப்பால் சீனாவின் பொருளாதாரத்தில் மேலும் ஒரு அடி விழுந்துள்ளதாகவும் மிகப்பெரிய ஒப்பந்தமானது கை நழுவி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றது.இது சீனாவிற்கு பெருத்த பொருளாதார சேதம் என்று கணிக்கின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…