அமெரிக்காவில் கொரோனா எதிரொலி… தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட துணை அதிபர் ….

Published by
Kaliraj
சீனாவில் முதலில் பரவிய கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவில் தான்  தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையிலும் இந்த கொரோனா வைரஸ் தற்போது  பரவியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர்  டிரம்பின் ராணுவ உதவியாளருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை அனைத்து ஊழியர்களும் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், துணை அதிபர் மைக் பென்சின் பத்திரிகை தொடர்பு செயலாளர் கேட்டி மில்லருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே, துனை அதிபர் மைக் பென்ஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இன்று அவர் வெள்ளை மாளிகைக்கு செல்வார் என்று தெரிகிறது. அவர்,  தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார் என்றும், அதில் அவருக்கு தொற்று இல்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும், வெள்ளை மாளிகை மருத்துவ குழுவின் ஆலோசனைகளை அவர் பின்பற்றுவார் என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
Published by
Kaliraj

Recent Posts

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.!

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.!

வயநாடு : நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.…

25 mins ago

“ரயில்களில் இதெல்லாம் கொண்டு வர வேண்டாம்” – தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!

டெல்லி : தீபாவளியை முன்னிட்டு, உங்கள் பண்டிகை பயணத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு ரயில்களில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை…

30 mins ago

புதிய தோற்றத்தில் கலக்கும் சிறகடிக்க ஆசை குடும்பம்.. விஜயா ,முத்து வேற லெவல்..!

சென்னை- சிறகடிக்க ஆசை குடும்பத்தில் இன்றைக்கான [அக்டோபர் 23] எபிசோடில் மொத்தமாக பார்ட்டிக்கு தயாராகிய குடும்பம்.. முத்துவின் காலில் விழும்…

31 mins ago

சர்ச்சைகளுக்கு மத்தியில் 3-வது திருமணம் செய்த பாலா! பொண்ணு யாரு தெரியுமா?

கேரளா : நடிகரும், இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான பாலா சர்ச்சைகளுக்கு மத்தியில் மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார். சென்னையைச்…

34 mins ago

டானா புயல் எதிரொலி: இந்த மூன்று மாநில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

ஒடிசா : மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டானா புயல், நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை…

57 mins ago

“அமெரிக்கா முதல் பெண் பிரதமரை வரவேற்க தயாராக உள்ளது”…கமலா ஹாரிஸ் பேச்சு!

அமெரிக்கா : வருகின்ற நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்காவில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் கமலா…

1 hour ago