அமெரிக்காவில் கொரோனா எதிரொலி… தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட துணை அதிபர் ….
சீனாவில் முதலில் பரவிய கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவில் தான் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையிலும் இந்த கொரோனா வைரஸ் தற்போது பரவியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராணுவ உதவியாளருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை அனைத்து ஊழியர்களும் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், துணை அதிபர் மைக் பென்சின் பத்திரிகை தொடர்பு செயலாளர் கேட்டி மில்லருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே, துனை அதிபர் மைக் பென்ஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இன்று அவர் வெள்ளை மாளிகைக்கு செல்வார் என்று தெரிகிறது. அவர், தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார் என்றும், அதில் அவருக்கு தொற்று இல்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது. இருப்பினும், வெள்ளை மாளிகை மருத்துவ குழுவின் ஆலோசனைகளை அவர் பின்பற்றுவார் என்று செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.