அமெரிக்காவில் 13 குழந்தைகளை இருட்டு அறையில் அடைத்து சித்ரவதை ……
கலிஃபோர்னியா மாகாணம் பெர்ரிஸ் நகரில் உடல் மெலிந்து சோர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர் அந்த நகர போலீசாரை அணுகி தன்னையும் தனது சகோதர சகோதரிகளை தனது பெற்றோர் அடைத்து சித்திரவதை செய்வதாக புகார் அளித்தார்.
அதன் பேரில் டேவிட் ஆலன் – லூயிஸ் அன்னா என்ற அந்த தம்பதியின் வீட்டுக்குச் போலீசார் சென்ற போது இருட்டான படுக்கை அறை ஒன்றில் 2 முதல் 29 வயது வரையிலானவர்கள் படுக்கையுடன் சேர்த்து சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தனர். மேலும் அந்த அறையில் கடும் துர்நாற்றமும் வீசியது.
உடனடியாக அவர்களை மீட்ட போலீசார் அனைவருக்கும் சிகிச்சையும் உணவும் அளித்தனர். அவர்களின் பெற்றோரை கைது செய்த போலீசார் குழந்தைகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்தது ஏன் என விசாரணை மேற்கொண்டுள்ளனர். 13 பேருமே அவர்களின் குழந்தைகள் தானா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.