ஈரான் மீது அடுத்த பொருளாதார அணுகுண்டை போட்ட அமெரிக்கா.!
- ஈரான் மீது அமெரிக்கா அடுத்த பொருளாதார அணுகுண்டை வீசியுள்ளது.
- ஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியளர்களுக்கு ஆயுத கடத்தலுக்கு உதவியதாக ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் மீதும் மேலும் ஈரானின் கப்பல் நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடையை விதித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரு மிகப் பெரிய நிறுவனங்கங்களுக்கு தடை விதித்துள்ளது.