அமெரிக்க தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்!உண்மைக்கும் கதைக்கும் வித்தியாசம் இருக்கிறது.. பாக். பதிலடி….
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா அளித்த நிதியுதவியை பாகிஸ்தான் பயன்படுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளில் 33 பில்லியன் டாலர்கள் நிதி உதவியை தந்துள்ளதாக கூறியிருந்தார். ஆனால் தீவிரவாதிகளை அழிக்காமல் அவர்களுக்கு புகளிடம் அளித்து வந்துள்ளதாக சாடிய டிரம்ப், இனி பாகிஸ்தானுக்கு நிதியுதவி கிடைக்காது என்று அறிவித்தார். டிரம்பின் அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
தேசிய பாதுகாப்பு குழுவை அவசரமாக கூட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி ஆலோசனை நடத்தி உள்ளார். டிரம்ப் அறிவிப்பு குறித்து விளக்கம் அளிக்கும் படி பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ஹாலோவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com