தென் அமெரிக்காவில் அமைந்துள்ள பராகுவே நாடு இந்த நாடானது பிரேசில் நாட்டின் எல்லையோரத்தில் உள்ளது.அந்த நாட்டில் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது.அங்கு உள்நாட்டு மற்றும் அருகில் உள்ள நாடான பிரேசிலில் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள் கடத்தல் இதுமட்டுமல்லாமல் பல கொடூர குற்றங்களை செய்த குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் அந்த சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு சுரங்கத்தை தோண்டி பிரேசில் நாட்டைச் சேர்ந்த 40 கைதிகள் மற்றும் பராகுவே நாட்டைச்சேர்ந்த 36 கைதிகள் என மொத்தம் 76 கைதிகள் தப்பிச்சென்று உள்ளனர்.தப்பிச் சென்ற கைதிகள் சிறைக்குள் தோண்டிய சுரங்கத்தின் மணலை மூட்டைகளாக கட்டி சிறையினுள் உள்ள ஒரு அறைக்குள் மறைத்து வைத்துவிட்டு தப்பிச்சென்று உள்ளனர்.தப்பிச்சென்ற இந்த கைதிகள் அனைவரும் பிரேசில் மற்றும் பராகுவே நாடுகளில் போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல கொடூர குற்றங்களை நிகழ்த்திய குற்றவாளிகள் இவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள் என்று அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவி பல விமர்சனங்களை காவல்துறையினர் தரப்பில் வைக்கப்பட்ட நிலையில் அந்த சிறையின் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுள்ளார்.மேலும் சில சிறைக்காவலர்களும் கைது செய்யப்பட்டு 76 கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்றது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…