"வரிவிதிப்பதில் மன்னன் இந்தியா"விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்…!!
இந்தியா வரிவிதிப்பதில் மன்னன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியா வரிவிதிப்பதில் மன்னன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ள டிரம்ப் என்னை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக, உடனடியாக வர்த்தகம் ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியா விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கே முதன்மை என்ற வர்த்தகக் கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், பிற நாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படாத நிலையில், அந்த நாடுகளோ அமெரிக்கப் பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.
மேலும் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பதை அந்நாடு விரும்பவில்லை என்றும், இதற்காக இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் நேற்றுமுன்தினம் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுடன் திருத்தியமைக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அறிவிப்பதற்காக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.
இது குறித்து தெரிவித்த டிரம்ப் கனடா-மெக்சிக்கோவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடனும் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சு நடைபெற்று வருவதாக அவர் கூறினார். ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மீது இந்தியா மிக அதிக வரி விதிப்பதாகவும், வரி விதிப்பதில் இந்தியா மன்னன் என்றும் டிரம்ப் அப்போது விமர்சித்தார்.
இந்தியாவுடன் நல்ல உறவு இருப்பதாகவும், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என இந்தியாவே அழைத்ததாகவும், அமெரிக்கா இந்தியாவை அழைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உடனே பேச்சுவார்த்தையை தொடங்க இந்தியா விரும்புவதாகவும், தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள நினைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
DINASUVADU