எச்1 பி விசாதாரர்கள் வாழ்க்கைத் துணைக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு?
எச்1பி விசா வைத்திருப்போரின் வாழ்க்கைத் துணையும் வேலைவாய்ப்பு கோருவதை தடுக்கும் முடிவை அமெரிக்காவில் குடியேற்றத்துறை ஒத்திவைத்துள்ளது. எச்1 பி விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவிக்கும் வேலை வாய்ப்பு தருமாறு கோரலாம்.
இந்நிலையில் இந்த விதிகளில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க குடியேற்றத்துறை முடிவு செய்தது. இதற்கான வரைவு மசோதா கடந்த மாதமே அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய சட்டவிதிகள் இந்தாண்டு இறுதி அல்லது 2019ம் ஆண்டு தொடக்கத்திலேயே அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஏற்கெனவே அமெரிக்காவில் பணி பெற்றோருக்கு புதிய சட்ட விதிகள் பொருந்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.