கடந்த 2009-ம் ஆண்டு நம் அண்டை நாடான இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில் இலங்கை ராணுவத்தின் 58-ஆவது பிரிவுக்கு தலைமை வகித்த சாவேந்திர சில்வா, போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும், மனிதாபிமானப் பொருள்களையும் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இவர் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டும் கடந்த 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. போரின்போது, ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்குக் குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல முயன்றபோது அதைத் தடுத்தவர் சவேந்திர சில்வா என்ற குற்றச்சாட்டு தற்போது வரை இருக்கிறது. போருக்குப் பின் சவேந்திர சில்வாவை இலங்கை அரசு ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர துணைத் தூதராக நியமித்தது. ஆனால், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இலங்கையின் ராணுவத்தின் தளபதியாக சவேந்திர சில்வா இருந்து வருகிறார்.இந்நிலையில், அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள சவேந்திர சில்வா திட்டமிட்டிருந்தார்.இந்தநிலையில், இலங்கை ராணுவத் தலைமை தளபதி சாவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார், அதில், மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு தண்டனை விதிக்கப்படுவது அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில், பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும், நீதி மற்றும் நல்லிணக்கத்தைத் தொடரவும் இலங்கை அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று மைக் பாம்பேயோ கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், இலங்கை ராணுவ தளபதி சாவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா தடை விதிக்கப்பட்டதற்கு இலங்கை அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…