ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்.!

செங்கக்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இரு நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. ஏனென்றால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த பகுதிக்கு வருவது தான் காரணம் என கூறப்படுகிறது. இதனால், அவ்வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக உள்ளது.
உலக பாஸ்போர்ட் தரவரிசை.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?
அந்தவகையில், கடந்த ஆண்டு இறுதியில் செங்கடலில் சர்வதேச கப்பல் போக்குவரத்தை குறிவைத்து ஈரான் ஆதரவு குழு உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தாக்குதலை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்படி, ஏமன் நாட்டில் அல் ஷதைதா, சத்தா, தாமர், சனா ஆகிய நகரங்களின் மீது சுமார் 10 நாடுகளின் கூட்டுப்படை வான்வழி தாக்குதலை நடத்தியாக கூறப்படுகிறது.
விமானம் மற்றும் கடற்படைகள் மூலம் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களின் ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட 12 மையங்களைக் குறிவைத்து இந்த நாடுகளும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்கா ஜோ பைடன் கூறியதாவது, ஈரானிய ஆதரவுடன் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், கடந்த ஆண்டு செங்கடலில் பயணம் செய்த அனைத்துலக கப்பல்களை தாக்கியதற்கு பிறகு முதல்முறையாக அமெரிக்காவும், பிரிட்டனும் பதிலடி தரத் தொடங்கியுள்ளன. எங்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது, தேவைப்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025