அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழ்ச்சி ….சீன அதிபர் ஜீ ஜின்பிங் சக்தி வாய்ந்த தலைவர்….
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , சீன அதிபரின் பதவிக் காலம் காலவரையின்றி அதிகரிக்கப்படுவதற்கான நடவடிக்கையை சுட்டிக்காட்டி, ஜீ ஜின்பிங்கை பாராட்டியுள்ளார். தற்போது சீனாவின் அதிபராக உள்ள ஜீ ஜின்பிங்கின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டுடன் நிறைவு பெறும் நிலையில், நிரந்தர அதிபராக மாறுவதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.
ஜீ ஜின்பிங்கை மிகச்சிறந்த பண்புள்ள மனிதர் என்றும், சீனாவின் சக்தி வாய்ந்த தலைவர் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்துள்ளார். ஜீ ஜின்பிங்கை வாழ்நாள் அதிபர் என்று குறிப்பிட்ட டொனால்ட் டிரம்ப், பதவிக் காலத்தை நீட்டிக்கும் தகுதியை அவர் பெற்று இருப்பதாகவும், இதேபோல அமெரிக்காவிலும் ஒரு நாள், அதிபரின் கால வரையறை நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.