Zantac மருந்துக்கு அமெரிக்கா தடை…!அபாயம் என எச்சரிக்கை
புற்று நோய் ஏற்படும் அபாயம் காரணமாக இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நெஞ்சு எரிச்சல் மாத்திரையான zantacக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று புண் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும் ரேனிடிடின் (Zantac) மாத்திரைகள் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் காரணமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து மேலாண்மை முகமை (FDA) தடை செய்து உள்ளது. ‘ஜண்டாக்’ என்று அழைக்கப்படுகின்ற இந்த ரேனிடிடின் மாத்திரையை சன் பார்மா மற்றும் டாக்டர் ரெட்டிஸ், கிளாக்சோஸ்மித்கிளைன் உள்ளிட்ட மருந்து நிறுவனங்கள் தயாரிக்கின்றது குறிப்பிடத்தக்கது. இதன் சந்தை மதிப்பு மட்டும் சுமார் ரூ.700 கோடி ஆகும்.இது இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப் படுகின்ற இம்மாத்திரையின் விலை ரூ. 1 மட்டுமே ஆனால் மருத்துவர் பரிந்துரை இல்லாமலே இதனை மக்கள் உட்கொண்டு வரும் பழக்கம் நிலவி வருகிறது.
மேலும் மருத்துவர்கள் பல மருந்துகளால் வயிற்றுப் புண் ஏற்படாமல் தடுக்க இந்த மாத்திரைகளை இணைத்து பரிந்துரை செய்வதை வழக்கம். இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ஒரு ஆய்வில் ரேனிடிடின் மாத்திரையில் புற்று நோய் ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் களத்தில் இறங்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து மேலாண்மை முகமை (FDA) நேரடியாக ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் ரேனிடிடின் மாத்திரையானது பல நாட்கள் இருப்பு வைக்கும் போது அதில் உள்ள ‘என்-நைட்ரோசோடியம் மிதைல்’; அளவானது அதிகரிப்பது தெரியவந்தது. அவ்வாறு அடிக்கடி இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் புற்றுநோய் உருவாகும் என்பதை உறுதி செய்த முகமை மருந்தை அமெரிக்காவில் தடை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.