அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் !
அமெரிக்காவில் குடியேறிய வெளி நாட்டினரின் மறு சீரமைப்பு குறித்த கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அண்மையில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசினார். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து பேசினார்.
குறிப்பாக கரீபியத் தீவுகளில் உள்ள நாடான ஹைட்டி குறித்து பேசும்போது ஒரு தரம் தாழ்ந்த வார்த்தையைப் உபயோகித்தார்.
ஹைட்டி, ஹோண்டூராஸ் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் குடியேறுவதை அனுமதிப்பதற்கு பதிலாக நார்வே போன்ற நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்கு குடியேறுவதையே நான் விரும்புகிறேன்.
ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக்கு ட்ரம்ப் மன்னிப்பு கேட்குமாறு ஐக்கிய நாடுகள் சபையில் ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றிணைந்து கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் உங்களை இனவெறியராக கருதுபவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
கேள்விக்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, இல்லை… நான் இனவெறியன் இல்லை. நீங்கள் நேர்காணல் செய்தவர்களில் குறைந்தபட்ச இனவாத உணர்வு கொண்டது நானாகத்தான். இதை மட்டும்தான் உங்களிடம் கூற முடியும்” என்றார்.