அமெரிக்கா கண்டனம்!ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக கண்டனம் …..
அமெரிக்கா வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நார்ட் கூறியதில், ஈரானில் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டத்தில் முகத்திரையை அகற்றிய பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நார்ட் (Heather Nauert) வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிரான பெண்கள் போராட்டத்தை ஈரான் அரசு கையாண்ட விதம் மற்றும் போராட்டத்தில் முகத்திரையை அகற்றிய 29 பெண்கள் கைது செய்யப்பட்டது கவலை அளிக்கச் செய்வதாகக் கூறி உள்ளார். ஈரான் மக்களின் கருத்துரிமைக்காக அமெரிக்கா துணை நிற்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.