அமெரிக்காவில் கடந்த 32 ஆண்டுகளாக எந்த போர்வெல்லிலும் குழந்தை விழவில்லை! காரணம் இதுதானா?!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 4 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர்.80 மணி நேரமாக நடைபெற்ற போராட்ட முயற்சி தோல்வி அடைந்து சிறுவன் இறந்து விட்டான்.
அமெரிக்காவில் கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் ஜெஸிகா என்ற ஒன்றரை வயது குழந்தை அவரது வீட்டின் பின்னாடி மூடப்படாமல் இருந்த 22 அடி ஆழ்துளை கிணற்றில் விளையாடி கொண்டிருக்கும் பொது தவறி விழுந்தது. இதனை அடுத்து அந்நாட்டின் மீட்புப்படைகள் 50 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த குழந்தையை உயிருடன் மீட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்க அரசு அதிரடியாக அந்நாட்டில் மூடப்படாமல் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்ட பின்னர் பொதுமக்களும் இந்த விஷயத்தில் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து ஒரு சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் முறைப்படி மூடப்பட்டு அதனை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு சான்றிதழும் கொடுத்தனர். இதனை அடுத்து 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வரை ஒரு ஆழ்துளை கிணறு விபத்து கூட நடந்ததில்லை ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை.
ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்க வேண்டும் என்ற அடிப்படை விழிப்புணர்வு இத்தனை உயிர்கள் பலியான பின்னரும் நமக்கு ஏற்படவில்லை. சுஜீத்தின் மறைவிற்குப் பின்னரும் இந்த விழிப்புணர்வு நமக்கு ஏற்படவில்லை என்றால் நம்முடைய பொருப்பின்மை உச்சகட்டத்தில் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்.