அமெரிக்கா அதிரடி !பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்ற உத்தரவு …
அமெரிக்கா பாகிஸ்தான் அரசு தனது மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை வெளியேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் ஜான் சல்லிவன், வெளியுறவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதம் நடத்தினார். அப்போது தீவிரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறும் பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த ஜான் சல்லிவன், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரை அதற்கான உதவிகளை அமெரிக்கா நிறுத்தி வைக்கும் எனக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்ற வேண்டும் என்றும் தவறினால் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்றும் ஜான் சல்லிவன் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.