ஷாப்பிங் செய்த குற்றச்சாட்டால் மொரீஷியஸின் முதல் பெண் அதிபர் அமீனா பதவி விலகுகிறார்…..
தமக்கு வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை தவறாகப் பயன்படுத்தி மொரீஷியசின் முதல் பெண் அதிபரான அமீனா குரிப்-ஃபகிம் (Ameenah Gurib-Fakim) ஷாப்பிங் செய்த குற்றச்சாட்டால் பதவி விலகுகிறார். வேதியியல் பேராசிரியராக இருந்த அமீனா 2015-ம் ஆண்டு மொரீஷியஸ் அதிபராகப் பொறுப்பேற்றார். அவர், பிளேனட் எர்த் என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தால் முனைவர் பட்டம் பெறுவதற்காகவும், கல்விக்காகவும் அவருக்கு கிரெடிட் கார்ட் வழங்கியிருந்தது.
ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தி துணி, நகை என ஷாப்பிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவர் மொரீஷியஸின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடிய பின், வரும் 12-ம் தேதி அதிபர் பதவியிலிருந்து விலகுவார் என பிரதமர் பிரவீந்த் ஜக்நாத் அறிவித்துள்ளார். தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள அதிபர் அமீனா, கடந்த ஆண்டு வாங்கியதற்கான தொகையை திருப்பிச் செலுத்திய பின், தற்போத அதில் எதற்கு பிரச்னையைக் கிளப்ப வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.