சிகப்பாக மாறிய அம்பர்ன்யா நதி.. இதுதான் காரணம்

Default Image

ரஷ்யா, சைபீரியா மாகாணத்தில் மின் நிலையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அங்குள்ள அம்பர்ன்யா நதி, மாசடைந்து சிகப்பாக காட்சியளிக்கிறது.

ரஷ்யாவின் சைபீரிய மாகாணத்தில் உள்ள அம்பர்ன்யா நதி, தற்பொழுது சிகப்பு நிறமாக காட்சியளிக்கிறது. இது குறித்து விசாரிக்கையில், அந்த நதிக்கு அருகில் உள்ள மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் தொட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை தீடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

இதனால் தொட்டியில் இருந்த சுமார் 20,000 டன் எண்ணெய் முழுவதும் அருகில் உள்ள அம்பர்ன்யா நதியில் கலந்தது. சம்பம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின்னர் பாதிப்பை கண்டறிந்த அதிகாரிகள், ஆற்றில் கலந்துள்ள எண்ணெய்யை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஆற்றில் எண்ணெய் கசிவை ஏற்படுத்திய மின் நிலையம் உலகின் முன்னணி நிக்கல் மற்றும் பல்லேடியம் உற்பத்தியாளரான, நோரில்ஸ்க் நிக்கலின் துணை நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. ஆனால், இந்த எண்ணெய் கசிவு, 350 சதுர கிலோ மீட்டர் அளவிலான ஆற்றை மாசுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நேற்று காணொலிக்காட்சி மூலம் பேசிய ரஷ்ய அதிபர், எண்ணெய் கசிவை தாமதமாக கண்டுபிடித்ததற்கும், அதிகாரிகளின் அலட்சித்திற்கும் அவர் கடிந்துகொண்டார். அதுமட்டுமின்றி, இந்த விபத்து தொடர்பாக அதிபரிடம் முழுவதும் எடுத்துரைத்துள்ளதாக சைபீரிய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்