நடுக்கத்தில் அம்பானி..! அதிர்ச்சி வைத்தியம் அளித்த நிறுவனம்..!
வோடபோன் இந்தியா , முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மற்ற நிறுவனங்களின் ப்ரீபெய்ட் திட்டங்களை சமாளிக்கும் வண்ணம், இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
ஒன்று வோடபோன் ரூ.569/- ப்ரீபெய்ட் திட்டமாகும். இது நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மற்றொன்று ரூ.511/- திட்டமாகும். இது நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
இந்த 2 திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இது நிறுவனத்தின் நீண்ட நாள் செல்லுபடியாகும் திட்டங்கள் ஆகும். இந்த இரண்டு திட்டங்கமே ரீசார்ஜ் செய்த தேதி முதல் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த திட்டங்கள் இப்போது சில வட்டங்களில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அனைத்து வட்டாரங்களிலும் எப்போது அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை.
இந்த புதிய திட்டங்களின் வருகையால் நிறுவனத்தின் ரூ.549 மற்றும் ரூ.509/- ப்ரீபெய்ட் திட்டங்கள் திரும்பி பெறப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் முறையே 28 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 3.5 ஜிபி தரவு மற்றும் 1.4 ஜிபி தரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் இரண்டும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தரவு நன்மைகளுடன் சேர்ந்து 100 எஸ்எம்எஸ் என்கிற நன்மையையும் வழங்குகின்றன.
வோடபோன் நிறுவனத்தின் அனைத்து புதிய ரூ.569/- திட்டமானது, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான 4ஜி / 3ஜி டேட்டாவை வழங்குகிறது. உடன் தினசரி வரம்பற்ற குரல் அழைப்புகளை, வாராந்திர வரம்பின் கீழ் வழங்குகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
மறுகையில் உள்ள ரூ.511/- திட்டமானது, நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான 4ஜி / 3ஜி டேட்டாவை வழங்குகிறது. உடன் தினசரி வரம்பற்ற குரல் அழைப்புகளை, வாராந்திர வரம்பின் கீழ் வழங்குகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் ரீசார்ஜ் தேதி முதல் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். குரல் அழைப்புகளின் நாள் வரம்பை பொறுத்தவரை 250 நிமிடங்கள் ஆகும் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் ஆகும்.
மொத்தத்தில், வோடபோன் ரூ.569/- ஆனது 252 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்க மறுகையில் உள்ள ரூ.511/- ஆனது 168 ஜிபி அளவிலான டேட்டாவை 84 நாட்களுக்குள் வழங்குகிறது. ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைத்த வோடபோன் ரூ.549 மற்றும் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது தற்போது ஒரு நாளைக்கு 3.5 ஜிபி மற்றும் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி தரவு நன்மையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.