ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி கொடுத்து தன் மனைவியை விவாகரத்து செய்த அமேசான் நிறுவனர்
ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும்
அமேசான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு ஜெஃப் பெசோஸ் நாவலாசிரியராக இருந்த மக்கின்சி என்பவரை 1993-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதன் பிறகு 1994-ம் ஆண்டு அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.
அமேசான் நிறுவனத்தின் தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்த வளர்ச்சி ஆகியவற்றில் மக்கின்சிக்கும் உண்டு. ஆனால் அமேசான் நிறுவனத்தில் அவர் பங்குதாரராக இல்லை.