முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்!

Default Image

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்பட ப்ளூ ஆர்ஜின் குழுவைச் சேர்ந்த 4 பேர் New Shepard ராக்கெட் மூலம் விண்வெளி சென்று தரையிறங்கினர்.

உலக அளவில் நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் New Shepard விண்கலம் மூலம் விண்வெளிக்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க், 82 வயதான முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்புயுள்ளனர்.

அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 3,600 கிமீ வேகத்தில் புறப்பட்ட New Shepard ராக்கெட் மூலம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்ளிட்ட 4 பேர் சுமார் 11 நிமிடங்கள் விண்வெளியில் மிதந்துள்ளனர். கடந்த வாரம் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் விண்வெளிக்கு சென்று பூமிக்கு திரும்பினர் என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் தனது முதல் விண்வெளி பயணத்தை அமேசான் நிறுவனர் ஜெஃப் ஜெப் பெசோஸ் வெற்றிகரமாக முடித்துள்ளார். 1969ல் நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்த இதேநாளில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உட்பட 4 பேர் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளனர். எனவே, விண்வெளி சுற்றுலா இனி பிரபலமாக அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்