இன்று மாலை விண்ணுக்கு பறக்க இருக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ்!

அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணுக்கு செல்ல இருக்கிறார்.
உலக அளவில் நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் New Shepard விண்கலத்தில் விண்வெளிக்கு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் பறக்க இருக்கிறார். ஜெஃப் பெசாஸுடன், அவரது சகோதரர் மார்க், 82 வயதான முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர் செல்ல உள்ளனர்.
இந்த நியூ ஷெப்பர்ட் விண்கலம் ஆட்டோமெட்டிக்காக இயங்க கூடியது. பைலட் இல்லாமல் விண்வெளிக்கு சென்று பின் மீண்டும் லேண்ட் ஆகும் திறன் கொண்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட விர்ஜின் கேலக்டிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்துக்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது.
வர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம் இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதில், விர்ஜின் கேலக்டிக் நிறுவனர் ‘ரிச்சர்ட் பிரான்சன் உட்பட ஐந்து பேருடன் விண்வெளிக்குப் பறந்தார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிரிஷா பன்லாவும் இடம் பிடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று New Shepard விண்கலத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உள்ளிட்ட 4 பேர் விண்வெளிக்கு பறக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025