உலகின் நம்பர் 1. பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ்…!!

Default Image

உலகின் நம்பர் 1. பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி சாதனை

உலகின் மிகப்பெரிய பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளினார் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ். செவ்வாயன்று ஃபோர்ப்ஸ் இதழின் வருடாந்திர பில்லியனர்கள்(பணக்காரர்கள்) பட்டியலில் இத்தகவல் வெளியிடப்பட்டது.  கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தரவரிசை 544 வது இடத்திலிருந்து 766 வது இடத்திற்கு சரிந்தார். அவருடைய சொத்து மதிப்பு இப்போது 3.1 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு 400 மில்லியன் டாலர் குறைவாக இருந்தது. கடந்த 12 மாதங்களில் அமேசான் பங்குகள் 59 சதவிகிதம் உயர்ந்துள்ளது. முதல் இடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட $ 112 பில்லியனாக உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள பில் கேட்ஸின் சொத்து மதிப்பு $ 90 பில்லியனாக உள்ளது. தரவரிசையின் மூன்றாவது இடத்தில் $ 84 பில்லியனுடன் இங்கிலாந்தின் முதலிட்டாளர் வாரன்  பஃபெட்  உள்ளார். அதன் பின் நான்காவது இடத்தில் பிரான்சின் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு $ 72.1 பில்லியனாக உள்ளது.

இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் $ 71 பில்லியனுடன் உள்ளார் . உலகின் 20 செல்வந்தர்களுள் இரண்டு சீன பில்லியனர்கள் உயர்ந்துள்ளனர்: சீன இணைய நிறுவனமான டென்சென் தலைமை நிர்வாகி மா ஹூடெங், அலிபாபா நிறுவனர் ஜாக் மா ஆகியோர் உள்ளனர். இந்தியா சார்பில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி $ 40 பில்லியனுடன் 19வது இடத்தில் உள்ளார்.

தற்போது உலகில் 2,208 பில்லியனர்கள்,தங்களை பணக்கார பட்டியலில் பதிவு செய்துள்ளனர். ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டு முதல் 18 சதவீதம் வரை 9.1 டிரில்லியன் டாலர் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 585 பில்லியனர்களுடன் அமெரிக்கா உள்ளது. அதனைத் தொடர்ந்து 373 பில்லியனர்களுடன் சீனா உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்