உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தகமான அமேசான் நிறுவனத்தில் 1,25,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலைகளை கொடுக்கப்போகிறது. அமேசான் நிறுவனமானது உலக அளவில் 1,25,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது. மேலும், டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் அறிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் உள்ள இந்நிறுவனத்தில் வேலை செய்யும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,300 ரூபாயாக (18 டாலர்) ஊதிய உயர்வு அறிவித்துள்ளது. அமேசானில் 1.25 லட்ச கிடங்கு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அமேசான் டெலிவரி சர்வீசஸின் துணைத்தலைவர் டேவ் போஸ்மேன், இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ரூ.2,19,000 வரை சிறப்புத்தொகையாக வழங்க உள்ளது.
மேலும், அமெரிக்காவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தளவாடங்களை இயக்க இம்மாத துவக்கத்தில் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 2,200 ஊழியர்களை கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் கிடங்கிற்கு வரும் அக்டோபர் மாதம் வேலைக்கு ஆட்கள் எடுக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப மற்றும் கார்ப்பரேட் வேலைகளுக்கு சுமார் 55,000 பேருக்கு அமேசான் நிறுவனத்தில் ஆட்கள் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…